சத்தியலிங்கத்தின் மூன்று அமைச்சுக்கள் விக்கினேஸ்வரன் வசம்

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்­தி­ய­லிங்கம் வச­மி­ருந்த மூன்று அமைச்­சுப் பொறுப்­புக்­களை முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன்  ஏற்­றுள்ளார். நிதியும் திட்­ட­மி­டலும், சட்­டமும் ஒழுங்கும், காணி, மின்­சக்தி, வீட­மைப்பு நிர்­மா­ணமும் தொழிற்­று­றையும் மற்றும் மாகாண நிர்­வாக அமைச்சு போன்ற அமைச்­சுக்கள் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் இருக்­கின்­றன.


இந்­த­நி­லையில், மேலும் மூன்று அமைச்­சுக்­களை அவர்  பொறுப்­பேற்­றுள்ளார்.

குறித்த பதவி கைய­ளிப்பு நேற்று வட­மா­காண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலை­மையில் இடம்­பெற்­றது.

வட மாகாண சுகா­தார, சுதேச மருத்­துவம், நன்­ன­டத்­தையும் சிறுவர் பரா­ம­ரிப்புச் சேவை­களும், சமூக சேவைகள், புனர்­வாழ்­வ­ளித்தல் மற்றும் மகளிர் விவ­காரம் ஆகிய அமைச்­சுக்கள் பா.சத்­தி­ய­லிங்கம் வசம் இருந்­தன. இவற்றில் சமூக சேவைகள், புனர்­வாழ்­வ­ளித்தல் மற்றும் மகளிர் விவ­கார அமைச்­சுக்­களே நேற்று வட மாகாண முத­ல­மைச்சர் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}