‘கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோக பூர்வமாக பிரகடனம் செய்யக் கோரும் மனுவை, ஸ்காபரோ -றூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் வெள்ளியன்று (மே-20) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தப் பிரகடனமானது, நாடு பூராகவும் தமிழ் மக்கள் தமது செழுமை வாய்ந்த தமிழ் பண்பாடு,கலாசாரம்,மொழி மற்றும் வரலாற்றை சார்ந்து விழாக்களைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது’
ஆனந்த சங்கரி அவர்களின் இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையைப் பாராட்டி, கனடியத் தமிழர் பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.